காந்திநகர்: குஜராத் மாநிலம் சபர்கந்தாவில் உள்ள சபர் பால்பண்ணையில் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பலவகை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 28) தொடங்கிவைத்து அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பிரதமர் கூறுகையில், "இந்தத் திட்டங்கள், உள்ளூர் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் வருவாயையும் ஈட்டித்தரும். இந்த மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிக்கும்.
இந்த திட்டத்தில் முக்கிய பங்காற்றும் சுகன்யா ஸ்மிருதி திட்ட பயனாளிகளுக்கும், பெண் பால் உற்பத்தியாளர்களுக்கும் எனது பாராட்டுக்கள். பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய திட்டங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்பத்துடன் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுவதால், சபர் பால் பண்ணையின் உற்பத்தி திறன் மேலும் கூடுதலாகும்.