காந்தி நகர்:குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோயிலில், இன்று ஆகஸ்ட் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களை காணொலி வாயிலாக திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்தார்.
இதில், 47 கோடி ரூபாய் மதிப்பிலான சோம்நாத் கோயில் நடைபாதை, சோம்நாத் கண்காட்சி மையம், கட்டட கலை சிற்பங்கள் ஆகியவை திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் 3.5 கோடி ரூபாய் மதிப்பில் புனரமைக்கப்பட்ட பழைய சோம்நாத் கோயில் வளாகமும் திறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி, கோயில் வளாகத்தில் கட்டப்பட உள்ள ஸ்ரீ சிவபார்வதி கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். இதன் மதிப்பீடு 30 கோடி ரூபாயாகும். இதில், கட்டடம், கருவறை, மண்டபம் ஆகியவையும் இடம்பெறுகின்றன. இந்த நிகழ்வில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, ஆகியோர் கலந்துகொண்டனர்.