மும்பை:மகாராஷ்டிரா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கட்டி முடிக்கப்பட்ட நாக்பூர் முதலாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு காப்ரி ரயில் நிலையத்தில் அடிக்கல் நாட்டினார். அதோடு காப்ரி ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோமோட்டிவ் சதுக்கம் மற்றும் பிரஜாபதி நகர் முதல் லோக்மான்யா நகர் வரையிலான இரண்டு மெட்ரோ ரயில் சேவைகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதையடுத்து ஃபிரீடம் பார்க் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நாக்பூர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து காப்ரி மெட்ரோ ரயில் நிலையம் சென்றடைந்தார். அப்போது இ-டிக்கெட்டை வாங்கிக்கொண்டு, ரயிலில் பயணித்த மாணவர்கள், பொது மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் உரையாடினார். இதுகுறித்த நிழச்சியில் பேசிய பிரதமர் மோடி, மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் இரட்டை எஞ்சின் அரசாங்கம் எவ்வளவு வேகமாக செயல்படுகிறது என்பதற்கு இன்று தொடங்கப்பட்ட திட்டங்கள் சான்றாகும்.