குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோர்டோ பகுதிக்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சுத்திகரிப்பு ஆலை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா, தானியங்கி பால் பதப்படுத்தும் ஆலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இன்று, குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்திற்குச் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, மாந்த்வி நகரில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்துக்காக உப்புநீக்கும் ஆலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஒரு நாளைக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் வகையில் இந்த ஆலை அமைக்கப்படவுள்ளது.
நாட்டில் நிலையான, மலிவு நீர்வள அறுவடைக்கு இது ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.