பெர்லின்:மூன்று ஐரோப்பிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்திற்காக பிரதமர் மோடி இன்று(மே 2) ஜெர்மனி சென்றடைந்தார். அவருக்கு பெர்லின் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஜெர்மன் அதிபர் ஒலாஃப் ஸ்கால்ச்சை அவர் சந்தித்தார். இதனையடுத்து மேலும் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய உள்ளார். இதனை மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜெர்மன் அதிபர் மற்றும் தொழில் துறை தலைவர்களுடன் கலந்துரையாட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த பயணத்தின் மூலம் இந்தியா மற்றும் ஜெர்மன் உறவை மேம்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.
இந்த பயணம் இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான நட்புறவை அதிகரிக்கும் என்று நம்புவதாக மோடி ட்வீட் செய்துள்ளார். ஜெர்மனி பயணத்தை தொடர்ந்து டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அவர் செல்கிறார்.நாளை (மே 3) டென்மார்க் செல்கிறார்.
பின் டென்மார்க்கில் நடக்க இருக்கும் நார்டிக் நாடுகளுக்கான உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். கடைசி நாளான மே 4 அன்று பாரிஸ் சென்று அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்க இருக்கிறார் . மேலும் அவருடன் இந்தியா -பிரான்சு இடையிலான நட்பு உறவை மேம்படுத்த ஆலோசனை நடத்துகிறார்.
இதையும் படிங்க:இந்தியா என்றால் வர்த்தகம்... செமிகான் மாநாட்டில் பிரதமர் மோடி...