தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் உள்நாட்டோடு, உலகையும் கவனிக்கிறோம்- பிரதமர் நரேந்திர மோடி! - நரேந்திர மோடி

கரோனா பெருந்தொற்று நெருக்கடியின்போது உள்நாட்டு போராட்டத்துடன் உலகின் தேவையையும் கவனித்துவருகிறோம் எனப் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

PM Modi holds virtual summit Modi holds virtual summit with Sanna Marin Narendra Modi interacts with Sanna Marin Finland India relations Modi holds virtual summit with finland PM India Finland ties சனா மரின் ஃபின்லாந்து நரேந்திர மோடி கரோனா
PM Modi holds virtual summit Modi holds virtual summit with Sanna Marin Narendra Modi interacts with Sanna Marin Finland India relations Modi holds virtual summit with finland PM India Finland ties சனா மரின் ஃபின்லாந்து நரேந்திர மோடி கரோனா

By

Published : Mar 16, 2021, 7:31 PM IST

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி ஃபின்லாந்து பிரதமர் சனா மரின் உடன் காணொலி வாயிலான உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு இன்று (மார்ச் 16) உரையாடினார்.

அப்போது அவர் கூறுகையில், “கரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உள்நாட்டு போராட்டத்துடன் உலகின் தேவைகளையும் இந்தியா கவனித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 58 மில்லியனுக்கும் அதிகமான கரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் சமீபத்திய வாரங்களில் சுமார் 70 நாடுகளை சென்றடைந்துள்ளன.

இந்தியா மற்றும் ஃபின்லாந்து ஆகிய நாடுகள் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை நம்புகின்றன. மனிதாபிமானம் மற்றும் ஜனநாயக வழியில் உலகளாவிய ஒழுங்கில் நடக்கின்றன. தொழில்நுட்பம், புதுமை, தூய்மையான எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் கல்வி போன்ற துறைகளில் இரு நாடுகளும் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன” என்றார்.

முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி, “சர்வதேச சோலார் பயன்பாடு கூட்டணியில் ஃபின்லாந்து சேர வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது, “ஃபின்லாந்து தொழில்நுட்ப நிபுணத்துவத்தால் இந்தியா பயனடைகிறது” என்றும் பாராட்டினார்.

இதையும் படிங்க:பினராயி விஜயனை எதிர்த்து தேர்தல் மன்னன் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details