டெல்லி:ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி வந்து உள்ளார். காலை 8 மணிக்கு டெல்லி வந்த ஜப்பான் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின் போது, இந்தியா - ஜப்பான் இடையிலான அமைதி, பாதுகாப்பு, நிலையான மற்றும் அமைதியான கரோனாவுக்கு பிந்தைய சூழல், தொழில்நுட்பம், பிராந்திய ஒருமைப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜி20 அமைப்பின் நடப்பாண்டுக்கான தலைமையை இந்தியா ஏற்றுக் கொண்டது போல், ஜி7 அமைப்பிற்கான தலைமையை ஜப்பான் ஏற்றுக் கொண்டு உள்ளது. இந்தக் கூட்டத்தின் தலைமைக்கான முன்னுரிமைகள், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக மத்திய வெலியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது.