இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று மேற்கொண்டார். இதில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த மூத்த அலுலவலர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி திருப்தி
இந்த ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள், முன்கள பணியாளர்கள், பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும் அடுத்த மாதங்களில் தடுப்பூசி விநியோகம் எவ்வாறு நடைபெறும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆறு நாள்களில் மட்டும் சுமார் 3.77 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மலேசியா, சௌதி அரேபியா, கனடா ஆகிய நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்த பிரதமர் மோடி, இந்த வேகத்தை தக்க வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், பரிசோதனை எண்ணிக்கை குறைக்காமல், தொற்று பரவும் பகுதிகளை கட்டுக்குள் வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
நாட்டில் இதுவரை 31.62 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில் முதல் டோஸ் செலுத்திக்கொண்டவர்கள் 26.14 பேர், இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் 5.48 கோடி பேர் ஆவர்
இதையும் படிங்க:சமூக செயற்பாட்டாளர் அகில் கோகாயக்கு பரோல்