உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகள் போர் தாக்குதலில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. இந்த போரை நிறுத்த வேண்டும் என சர்வதேச நாடுகள், ஐநா சபை, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து முயற்சித்துவருகின்றன. உக்ரைன் நாட்டில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள இப்போர் ஐரோப்பிய கண்டத்தின் அமைதிக்கே இது பங்கம் ஏற்படுத்தும் என ஐரோப்பிய நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய கவுன்சில் அமைப்பின் தலைவரான சார்லஸ் மைக்கெல் இவ்விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் தொடர்புகொண்டு பேசியுள்ளார். உக்ரைனில் ஏற்பட்டுள்ள மோசமான சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்த மைக்கல், இந்த போர் தாக்குதலில் இந்திய மாணவர் உயிரிழந்ததற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.