தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியர்களின் நினைவில் இந்த வரலாறு பொறிக்கப்படும் - இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து - இந்திய ஹாக்கி வெண்கலப் பதக்கம் வென்றது

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Aug 5, 2021, 9:10 AM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஜெர்மனி அணியை 5-4 என்ற கோல் கணக்கில் இன்று வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது.

இதன் மூலம், ஒலிம்பிக்கில் 41 வருடங்களுக்கு பிறகு ஹாக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.

இந்நிலையில், பதக்கம் வென்ற ஹாக்கி அணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்திய ஹாக்கி அணி வரலாறு படைத்துள்ளது.

இந்த வரலாறு ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும். ஹாக்கி அணியை நினைத்து இந்தியா பெருமை கொள்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details