டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். அவர் ஒரு ட்வீட் பதிவிட்டால், கோடிக்கணக்கான மக்கள் பார்வையிடுவர். அவரைப் பின்தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவந்தது.
கடந்தாண்டு 60 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருந்த பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கிற்கு, ஒரே ஆண்டில் கூடுதலாக 10 லட்சம் ஃபாலோயர்ஸ் கிடைத்துள்ளனர். உலக அளவில் அதிக ட்விட்டர் பின்தொடர்பவர்களைக் கொண்டவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி 11ஆவது இடத்தில் உள்ளார்.