மும்பை:மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர்-பிலாஸ்பூர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை, நாக்பூர் ரயில் நிலையத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். முன்னதாக பிரதமர் மோடி, வந்தே பாரத் விரைவு ரயிலின் பெட்டிகள், பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் ஆய்வு செய்தார்.
அதோடு வந்தே பாரத் விரைவு ரயிலின் கட்டுப்பாட்டு மையத்திலும் ஆய்வு மேற்கொண்டு நாக்பூர் மற்றும் அஜ்னி ரயில் நிலையங்களின் மேம்பாட்டுப் பணிகளையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் கலந்துகொண்டனர்.