இந்திய தொழில்துறை கூட்டமைப்பு(CII) சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் காணொலி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசுகையில், "இந்தியாவின் வளர்ச்சியில் தொழில்துறையினர் பங்களிப்பு அபாரமானது.
முடங்கியிருந்த பொருளாதாரம் உங்களின் கடும் உழைப்பால் மீண்டும் எழுச்சிப் பெறத் தொடங்கியுள்ளது. வர்த்தக நடவடிக்கை உயர்த்தும் அனைத்து விதமான முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
வரலாற்றிலேயே அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளும், அந்நிய செலாவனியும் இந்தியாவிடம் உள்ளது. புதிய உலகத்துடன் சேர்ந்து வளர்ச்சிபெற புதிய இந்தியா தயாராக உள்ளது. கரோனா காலத்திலும் அரசு உறுதியுடன் சீர்திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது.