டெல்லி:மறைந்த பிரதமா் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில், கட்சியை வலுப்படுத்தும் வகையில், மைக்ரோ நன்கொடை (micro donations) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் ஒருவர் 5 ரூபாயில் இருந்து ரூ 1,000 வரை நன்கொடையாக வழங்கமுடியும். இத்திட்டம் அடுத்தாண்டு பிப்ரவரி 22ஆம் தேதி வரை திட்டத்தை செயல்பட உள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் 1,000 ரூபாயை பாரதிய ஜனதா கட்சியின் கட்சி நன்கொடை அளித்துள்ளேன். பாஜகவை வலுவாக்குவதற்கு தொண்டர்களும் நன்கொடை அளிக்க வேண்டும்.
எப்பொழுதும் தேசத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்ற நமது லட்சியமும், தன்னலமற்ற சேவை கலாச்சாரமும் உங்களின் சிறிய நன்கொடையால் வலுப்பெறும். பாஜகவை வலுப்படுத்த உதவுங்கள். இந்தியாவை வலிமையாக்க உதவுங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவில் அடுத்த 2 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு ஒமைக்ரான்; நிபுணர் குழு எச்சரிக்கை