தமிழ்நாடு

tamil nadu

புரெவி புயல்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சருடன் பிரதமர் பேச்சு!

By

Published : Dec 2, 2020, 10:19 PM IST

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.

புரெவி புயல் Puravi cyclone cyclone PM Modi நரேந்திர மோடி எடப்பாடி பழனிசாமி ஆய்வு
புரெவி புயல் Puravi cyclone cyclone PM Modi நரேந்திர மோடி எடப்பாடி பழனிசாமி ஆய்வு

டெல்லி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.2) பேசினார்.

வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இன்று இரவில் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்தப் புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் காரணமாக வியாழக்கிழமை (டிச.3) கேரளா உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேரள, தமிழ்நாட்டு முதலமைச்சர்களிடம் புயல் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

முன்னதாக வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மற்றும் வடகிழக்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லி பார் கவுன்சில் பிரதமருக்கு கடிதம்!

ABOUT THE AUTHOR

...view details