தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு - 200

LPG cylinder price reduced: வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 4:17 PM IST

Updated : Aug 29, 2023, 4:42 PM IST

டெல்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ரக்‌ஷா பந்தன் மற்றும் ஓணம் பண்டிகை பரிசாக பிரதமர் மோடி இதனை அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது 9.6 கோடி பயனாளிகளைப் பெற்று உள்ள உஜ்வாலா கேஸ் திட்டத்தில் கூடுதலாக 75 லட்சம் பயனாளிகளை சேர்க்க உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்து உள்ளார். இதன் மூலம் 10.35 கோடி பயனாளிகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன் பெற உள்ளனர்.

தற்போதைய நிலையில், டெல்லியில் வீட்டு உபயோக சிலிண்டர் 1,103 ரூபாய்க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், நாளை (ஆகஸ்ட் 30) முதல் 903 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இனி 703 ரூபாய்க்கு சிலிண்டரை வாங்க முடியும்.

மேலும், இந்தியா தனது இயற்கை எரிவாயுத் தேவைகளில் 60 சதவீதத்திற்கு இறக்குமதியை நம்பியே உள்ளது என தெரிவித்த அனுராக் தாகூர், தற்போதைய அரசு பெண்களின் மேம்பாட்டிற்காக பல திட்டங்களைத் தொடங்கியுள்ளது என தெரிவித்து உள்ளார்.

Last Updated : Aug 29, 2023, 4:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details