தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.க ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றார். சென்னை கிண்டி ராஜ்பவனில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் செய்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பிரமதர் மோடி வாழ்த்து - ஸ்டாலின் மோடி வாழ்த்து
தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரமதர் மோடி வாழ்த்து
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.