தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஈரானின் புதிய ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து! - பிரதமர் நரேந்திர மோடி

ஈரான் நாட்டின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தலைமை நீதிபதி இப்ராஹிம் ரைசிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

By

Published : Jun 20, 2021, 6:40 PM IST

டெல்லி:பிரதமர் நரேந்திர மோடி, ஈரானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், இந்தியா, ஈரான் நாட்டிற்கு இடையிலான உறவை வலுப்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளார்.

நேற்று (ஜூன் 19) நடைபெற்ற ஈரான் ஜனாதிபதி தேர்தலில் நீதித்துறை தலைவர் வெற்றி பெற்றார். நாட்டின் உயர் பதவிகளில் உள்ளவர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில், இஸ்லாமிய நாடுகளின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது.

பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசிக்கு வாழ்த்துக்கள். இருநாட்டின் உறவுகளை மேம்படுத்த அவருடன் இணைந்து பணியாற்ற எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பெட்ரோல் விலை உயர்வு : 'வரி வசூலில் பிஹெச்டி' என ராகுல் நையாண்டி!

ABOUT THE AUTHOR

...view details