தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் முதல் வாக்காளரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் - November 12 Assembly polls in the state

இந்தியாவின் முதல் வாக்காளர் ஷ்யாம் சரண் நெகி இன்று (நவ-5) மறைந்ததையடுத்து பிரதமர் மோடி அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Etv Bharatநாட்டின் முதல் வாக்காளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மோடி
Etv Bharatநாட்டின் முதல் வாக்காளரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த மோடி

By

Published : Nov 5, 2022, 6:29 PM IST

மண்டி(இமாச்சலப் பிரதேசம்):சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நெகி இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (நவ-5) காலை காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மண்டி மாவட்டம் சுந்தர்நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி , “நான் காலை டெல்லியில் இருந்து புறப்பட்டபோது, ​​சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரும், கின்னாரின் கல்பாவில் வசிப்பவருமான நெகியின் மறைவு குறித்த செய்தியை அறிந்தேன். 106 வயதான நெகி அவரது வாழ்நாளில் 30 முறைக்கு மேல் வாக்களித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, நெகி இமாச்சல பிரதேச தேர்தலுக்கு தபால் மூலம் அவரது கடைசி வாக்கினை செலுத்தினார். அவர் இறப்பதற்கு முன்பே அவரின் கடமையை நிறைவேற்றியுள்ளார். ஜனநாயகம் குறித்த நெகியின் கண்ணோட்டம் நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இளைஞர்கள் கனத்த இதயத்துடன், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். அவரது உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவருக்கு நான் தலை வணங்குகிறேன் என்று கூறினார். வரும் நவம்பர் 12ஆம் தேதி இமாச்சலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி நவம்பர் 2 ஆம் தேதி, தபால் வாக்கு மூலம் நெகி கடைசியாக வாக்களித்ததார். நேகியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சரண் நெகி காலமானார்

ABOUT THE AUTHOR

...view details