அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜோ பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை இன்று நடந்துவருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி புகுந்து ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இதற்கு பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றத்திற்கு எதிராக வெடிக்கும் போராட்டங்கள் வேதனை அளிப்பதாக ட்வீட் செய்துள்ளார்.
அதில், ”ஒழுங்காகவும் அமைதியாகவும் அதிகார பரிமாற்றம் தொடர வேண்டும். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையைத் தகர்த்தெறிய அனுமதிக்க முடியாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். இதைத்தொடர்ந்து வெள்ளை மாளிகையைச் சுற்றி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க:வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச் சூடு - ஆதரவாளர்கள் கலைந்து செல்ல ட்ரம்ப் அறிவுறுத்தல்!