தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு.. எதிர்க்கட்சிகள் அமளி.. பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (கியாஸ்) விலை உயர்வு பிரச்சினையை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

PM Modi
PM Modi

By

Published : Mar 22, 2022, 12:39 PM IST

டெல்லி : நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடர் வியூகங்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிவரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

budget 2022: பர்வத் மாலா திட்டம்- நிதின் கட்கரி வரவேற்பு

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் விதி 267இன் கீழ் எரிபொருள்கள் விலையேற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நோட்டீஸ் அளித்தன. இதனை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டார்.

நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை மறுபடியும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது எரிபொருள்கள் 80 பைசா வரை உயர்வை சந்தித்துள்ளன. இந்த விவகாரம் பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிரொலித்துவருகிறது.

பெண்ணாறு- காவிரி இணைப்பு உள்ளிட்ட பட்ஜெட்டின் முழு விவரம்!

5 மாநில தேர்தலுக்கு பின்னர் எரிபொருள்கள் விலை அதிகரிக்கப்படுகின்றன என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ஆம் தேதி தொடங்கி பிப்.17ஆம் தேதி நிறைவுற்றது. தற்போது தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு ஏப்.8ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையும் படிங்க : முற்போக்கு பட்ஜெட்- யோகி ஆதித்யநாத்!

ABOUT THE AUTHOR

...view details