தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத் பாலம் விபத்தை தொடர்ந்து அகமதாபாத் சாலை கண்காட்சியை ரத்து செய்த மோடி - மோர்பி கேபிள் பாலம் இடிந்த விபத்து

குஜராத் மற்றும் ராஜஸ்தானுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததையடுத்து, அகமதாபாத்தில் நடைபெறவிருந்த சாலைக் கண்காட்சியை ரத்து செய்துள்ளார்.

Etv Bharatகுஜராத்  பாலம் விபத்தை தொடர்ந்து அகமதாபாத் சாலை கண்காட்சியை ரத்து செய்த மோடி
Etv Bharatகுஜராத் பாலம் விபத்தை தொடர்ந்து அகமதாபாத் சாலை கண்காட்சியை ரத்து செய்த மோடி

By

Published : Oct 31, 2022, 10:14 AM IST

மோர்பி (குஜராத்) : குஜராத் மாநிலத்தில் நேற்று (அக்-30) மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்துகுள்ளானதை தொடர்ந்து மோடி அகமதாபாத்தில் இன்று நடைபெற இருந்த சாலை கண்காட்சியை ரத்து செய்துள்ளார். குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார்.

பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட இருந்த நிலையில் நேற்று (அக்-30) மாலை நடைபெற இருந்த பேஜ் கமிட்டி சினே மிலன் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும் மோடி சி-295 விமான வசதிக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் 2900 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை அர்ப்பணிக்கும் திட்டம் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் அட்டவணைப்படி நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக குஜராத் ஊடக ஒருங்கிணைப்பாளர் டாக்டர் யக்னேஷ் டேவ் கூறுகையில், ‘ குஜராத் மோபி பாலம் இடிந்து விழுந்ததில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உட்பட பலர் இறந்திருக்கலாம் எனத் தெரிவித்தார். குஜராத்தில் நடந்த விபத்தில் , இதுவரை 132 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:மோர்பி பாலம் விபத்து: பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details