முனிச் (ஜெர்மனி):ஜெர்மனியில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஜூன்26) ஜெர்மனி சென்றடைந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, கனடாஆகிய நாடுகள் பங்கேற்கின்றன.
இந்த மாநாடுல இன்றும், நாளையும் நடக்கிறது. ஸ்குலோஸ் எல்மாவ் என்ற இடத்தில் 'ஜி-7' அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில்இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இங்கு வந்துள்ளார். ஜெர்மனியின் முனிச் நகருக்கு வந்தடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.