ஹைதராபாத் : வைணவ ஆச்சாரியார் ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ராமானுஜர் திருவுருவ சிலையை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (பிப்.5) திறந்துவைக்கிறார்.
இந்தச் சமத்துவ சிலை முச்சிந்தல் பகுதியில் உள்ள சின்ன ஜீயர் ஆசிரமத்தில் 216 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராமானுஜர் சிலை திறப்பை முன்னிட்டு சின்ன ஜீயர் சுவாமிகள் தலைமையில் வேத பண்டிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
இந்த ஆசிரமத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்றும், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 7ஆம் தேதியும், உள்துறை அமைச்சர் அமித் ஷா 8ஆம் தேதியும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 13ஆம் தேதியும் வருகை தருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பயணம்
- பிற்பகல் 2 மணிக்கு பேகம்பேட் விமான நிலையத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார்.
- அங்கிருந்து ஹெலிகாப்டரில் ICRISAT (Science of discovery to science of delivery) பொன்விழா கொண்டாட்டங்களுக்கு செல்வார்.
- மாலை 5 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் பிரதமர் ஸ்ரீராம நகருக்கு செல்கிறார்.
- அவர் விருந்தினர் மாளிகையில் 10 நிமிடங்கள் சிற்றுண்டி எடுத்து யாகசாலையை அடைவார்.
- மாலை 6 மணிக்கு அவர் பெருமாள் சுவாமியை தரிசித்து யாகசாலையில் உள்ள விஷ்வக் சென் பூஜையை செய்வார்.
- இரவு 7 மணிக்கு ராமானுஜா சார்யா சிலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
- ராமானுஜா சார்யா சிலை மீது 3டி விளக்கு காட்சி பிரதமர் மோடி முன்னிலையில் 15 நிமிடங்கள் காட்சிப்படுத்தப்படும்.
- மீண்டும் யாகசாலைக்குச் சென்று நாளை (பிப்.6) நடத்தப்படும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண யாகத்திற்கு செல்வார்.
- 5000 வேதபண்டிதர்கள் பிரதமர் மோடிக்கு வேதம் சொல்லி ஆசி வழங்குவார்கள்.
- பின்னர் அவர் சாலை வழியாக ஷம்ஷாபாத் விமான நிலையத்திற்குச் செல்வார்.
- அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.