Vaccination for children: இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி மக்களிடம் இன்று (டிசம்பர் 25) உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுவது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். 18 லட்சம் தனிப்படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
குழந்தைகளுக்காக 90,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மாநில அரசுகளுக்கு 4 லட்சம் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பரவலை தடுக்க நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
தடுப்பூசி போடும் பணிகளை இந்திய அரச முன்னரே தொடங்கி விட்டது. தடுப்பூசி போடப்பட்டதால் கரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெல்ல முடிந்தது.
ஆக்சிஜன் ஆலைகள்
தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதில் ஒன்றிய அரசு விரைவாக செயல்பட்டது. நாடு முழுக்க 3,000 ஆக்சிஜன் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
மூக்கு வழியாக செலுத்தும் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும். டிஎன்ஏ அடிப்படையிலான தடுப்பூசிக்கும் விரைவில் ஒப்புதல் அளிக்கப்படும்.