டெல்லி : இஸ்லாமியர்கள் நபிகள் நாயகம் பிறந்தநாளை மிலாது நபி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோர் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இரக்கம் மற்றும் சகோதரத்துவத்தின் நற்பண்புகள் எப்போதும் நிலவட்டும். மிலாது நபி வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விடுத்துள்ள வாழ்த்தில், “முகம்மது நபியின் பிறந்த நாளான இன்று சக குடிமக்களுக்கு, குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள். நபியின் வாழ்க்கை மற்றும் இலட்சியங்களிலிருந்து உத்வேகம் பெற்று சமூகத்தின் செழிப்பு மற்றும் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக உழைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஜனநாயகக் கடமையாற்றிய பிரதமரின் தாய்!