ஹைதராபாத்:தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு இரண்டாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் சந்திரசேகர் ராவ், மூன்றாவது முறையாக வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைத்திட வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார். அதேவேளையில், எதிர்கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், தெலங்கானா தேர்தல் களம் அதகளப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தைப் பல வாரங்களுக்கு முன்பே பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தொடங்கி விட்ட நிலையில், நேற்று (அக்.3) தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர், தெலங்கானா மாநில அரசையும், முதல்வர் சந்திரசேகர் ராவையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
மேலும், தமிழக அரசையும் விமர்சித்தார், பிரதமர் மோடி. இது தொடர்பாக அவர் பேசியதாவது, "தமிழகத்திலுள்ள கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது. இந்து கோயில்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது அநியாயம். சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களைத் தென்னிந்திய மாநிலங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரவில்லை.
ஆனால், கோயில்களை மட்டும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அதன் சொத்துக்களையும், வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்கள். மேலும், சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் எவ்வளவு மக்கள் தொகையோ, அதற்கேற்றவாறு உரிமை என தற்போது காங்கிரஸ் பேசிவருகிறது. இ