கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மாநில விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் திட்டத்தை செயல்படுத்த சில நாள்களுக்கு முன்பு ஒப்புதல் தெரிவித்தார். தொடர்ந்து, இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசின் இணையதளத்தில் தங்களை பதிவு செய்த அனைவரின் விவரங்களையும் தெரிவிக்குமாறு மம்தா பானர்ஜி மத்திய அரசிடம் கேட்டிருந்தார்.
இதையடுத்து, மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மம்தா பானர்ஜிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாய குடும்பங்களுக்கு மூன்று சம தவணைகளில் ஆண்டுக்கு ரூ 6,000 வருமான உதவி வழங்கப்படுகிறது. இதற்காக மேற்கு வங்க மாநில அரசு சேமிப்புக் கணக்குகளைத் மக்கள் தொடங்குவதை உறுதி செய்ய வேண்டும்.