டெல்லி:நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார். அதோடு முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
"கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்" - குறித்து மோடி அவரது ட்விட்டரில்
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
Etv Bharatபிரதமர் மோடி ஆசிரியர் தினத்தில் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை
இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஆசிரியர்கள் தினத்திற்கு #TeachersDay குறிப்பாக, இளைஞர் மனங்களில் கல்வியின் சுகங்களை பரப்புகின்ற கடினமாக உழைக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவருக்கும் நான் புகழாரம் சூட்டுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:தேசிய ஆசிரியர் விருது வென்றவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்