இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.
வெள்ளை மாளிகையில் அந்நாட்டு துணை அதிபரான கமலா ஹாரிஸை மோடி சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவும் அமெரிக்காவும் இயற்கையான கூட்டாளிகள் என்று மோடி கூறினார்.
அதனைத் தொடர்ந்து மோடி, மிகவும் நெகிழ்ச்சியான வகையில், கமலா ஹாரீஸூக்கு அவரது தாத்தா ஸ்ரீ பி.வி. கோபாலன் தொடர்பான பழைய நினைவின் நகலை மரத்தால் ஆன கைவினை சட்டத்தில் மோடி வழங்கினார்.
அவருடைய தாத்த பி.வி கோபாலன் இந்தியாவில் மூத்த அரசாங்க அலுவலராக பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார். அதுமட்டுமல்லாது குலாபி மீனாகரி செஸ் செட்டையும் மோடி கமலா ஹாரீஸுக்கு பரிசாக வழங்கினார்.
இந்த செஸ் செட், பழமையான நகரமும், மோடியின் மக்களவைத் தொகுதியான வராணாசியுடன் நெருங்கிய தொடர்புடையது. இந்த செஸ் போர்டில் உள்ள ஒவ்வொரு பகுதியும் குறிப்பிடத்தக்க வகையில் கலைநயமிக்க கைவினைப் பொருள்களை கொண்டது. அவற்றின் வண்ணங்கள் காசி நகரின் பெருமையை பிரதிபலிப்பவையைாகும்.
இதே போல் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு வெள்ளியில் குலாபி மீனாகரி கப்பல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த கப்பலும் கைவினைப் பொருள்களில் வாரணாசியின் கலைத் தன்மையை பிரதிபலிக்கிறது. ஜப்பான் பிரதமர் யோஷிஹிட் சுகாவுக்கு சந்தன புத்தர் சிலையை மோடி பரிசாக வழங்கினார்.
இதையும் படிங்க: வெள்ளை மாளிகையில் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு