இந்தியாவில் நிலவும் கோவிட்-19 தொற்று நிலவரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர் அலுவல் கூட்டம் இன்று (செப் 10) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுகாராதரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் கோவிட்-19 பரவல், தடுப்பூசி திட்டம் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் நாட்டின் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
நாட்டின் தடுப்பூசி நிலவரம்
இந்தியாவில் இதுவரை மொத்தம் 72.89 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 55.63 கோடி பேர் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர். 17.26 கோடி பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.
நாட்டின் தொற்று பாதிப்பு விகிதம் 2 விழுக்காடுக்கு கீழ் குறைந்துள்ளது. இதையடுத்து ஒரு சில மாநிலங்களை தவிர அனைத்து மாநிலங்களும் தளர்வுகளை அறிவித்துள்ளன.
கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. பஞ்சாப் மாநில அரசு தங்கள் மாநில அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:தடுப்பூசி போடவில்லை என்றால் கட்டாய விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு செக்