தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: கரோனா தடுப்பூசி குறித்து ஆலோசனை! - அரசியல் கட்சி

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கரோனா நிலவரம் தொடர்பான அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவருகிறது.

பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: கரோனா தடுப்பூசி குறித்து ஆலோசனை!
பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்: கரோனா தடுப்பூசி குறித்து ஆலோசனை!

By

Published : Dec 4, 2020, 1:43 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும்நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. கரோனாவிற்கு எதிரான தடுப்பூசியைத் தயாரிக்கும் பணியில் சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கும் அனைத்துக் கட்சிகள் கூட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றுவருகிறது. இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் நிலவரம், கரோனா தடுப்பூசி விவகாரம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனத் தெரிகிறது.

தற்போது, கரோனா தடுப்பூசி தொடர்பாக அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். காணொலி மூலம் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் மக்களவை, மாநிலங்களவை தலைவர்கள், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுதீப் பாண்டியோபாத்யாய், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷரத் பவார், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நாமா நாகேஸ்வர ராவ், சிவசேனாவைச் சேர்ந்த விநாயக் ரவுத் ஆகியோரும் அவர்களது கட்சி சார்பாக பிரதமருடன் நாட்டின் கரோனா நிலவரம், விவசாயப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க: 'வேளாண் திருத்தச்சட்டங்களை ரத்துசெய்யும் வரை போராட்டம் தொடரும்' - வடமாநில விவசாயிகள் உறுதி

ABOUT THE AUTHOR

...view details