2019ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்தியாவில் கரோனா பரவத் தொடங்கிய நிலையில், பொது முடக்கத்தை அமல்படுத்தி பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளத் தொடங்கின.
அதன் ஒரு பகுதியாக மக்களின் நிதித் தேவையை கருத்தில் கொண்டு கரோனா சூழலை எதிர்கொள்ள பி எம் கேர்ஸ் நிதியத்துக்கு நிதி அளித்து உதவுமாறு பிரதமர் மோடி கோரியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினருக்கு பிஎம் கேர்ஸ் நிதியத்தில் நிதி அளித்து வந்த நிலையில், மற்றொருபுறம் சர்ச்சைகளும் வெடித்தன. ஏற்கெனவே பிரதமர் நிவாரண நிதி இருக்கும்போது எதற்காக இந்த அமைப்பு என எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து சாடி வருகின்றனர்.