தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தர அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் - பிரதமர் மோடி - மாற்றுத்திறனாளிகள் மாநாடு

டெல்லி: மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

மோடி
மோடி

By

Published : Dec 3, 2020, 1:57 PM IST

உலகம் முழுவதும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 'கரோனாவுக்கு பிறகான உலகத்தில் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய சிறப்பான காலத்தை மீண்டும் கட்டமைப்போம்' என்ற தலைப்பை ஆய்வுப்பொருளாக ஐநா தேர்வுசெய்துள்ளது.

மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரகளின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தரும் நோக்கில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வலிமை மற்றும் தேல்விகளிலிருந்து விரைவாக மீண்டெழும் குணம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.

ஆக்சசிபில் இந்தியா என்ற முயற்சியின் மூலம் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளின் வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன" எனப் பதிவிட்டுள்ளார். டிசம்பர் 4ஆம் தேதி, ஐநாவின் 13ஆவது கூட்டத் தொடரோடு மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் மாநாடு நடத்தப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details