தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுபான்மையினரின் நிலைமை மோசமடைந்துவருகிறது - மெகபூபா முஃப்தி - ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி

ஸ்ரீநகர்: நாட்டில் சிறுபான்மையினரின் நிலைமை மோசமடைந்துவருவதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.

மெகபூபா முஃப்தி
மெகபூபா முஃப்தி

By

Published : Jan 7, 2021, 7:26 PM IST

சிறுபான்மையின மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என இந்தியா மற்ற நாடுகளுக்கு அறிவுரை வழங்கிவரும் அதே வேளையில், நம் நாட்டில் அவர்களின் நிலைமை மோசமடைந்துவருகிறது என மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெகபூபா முஃப்தி விமர்சனம் செய்துள்ளார்.

முன்னதாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது கொழும்புவில் பேசிய அவர், "ஒருங்கிணைந்த இலங்கையில் அமைதி, நீதி, சமத்துவம், கண்ணியம் ஆகியவற்றை விரும்பும் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை அந்நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும்" என்றார்.

ஜெய்சங்கரின் இந்த கருத்தை விமர்சிக்கும் வகையில் முஃப்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறுபான்மையின மக்களை கண்ணியமாக நடத்த வேண்டும் என இந்தியா மற்ற நாடுகளுக்கு அறிவுரை வழங்கிவருகிறது. அதேவேளையில், நம் நாட்டில் அவர்களின் நிலைமை மோசமடைந்துவருகிறது.

இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக உள்ள நாட்டின் ஒரே மாநிலத்தை பிரித்து அதன் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு சமூக ஒத்திசைவு மிக முக்கியம்" என பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details