தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

லுடோ விளையாட்டுக்குத் தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு - gambling Ludo game

லுடோ விளையாட்டுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை குறித்து பதிலளிக்குமாறு மாநில அரசுக்கு, மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லுடோ
லுடோ

By

Published : Jun 6, 2021, 11:43 AM IST

கரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்கள் பெரும்பாலோனோர் மொபைலில் லுடோ விளையாட்டை விளையாடிவருகின்றனர். இதற்குப் பலரும் அடிமையாவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கிடையில் லுடோ விளையாட்டை உருவாக்கிய, உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் கேசவ் முலே, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதற்கு காவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்காததால் உடனே அவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், லுடோவை தடை செய்யக்கோரி வழக்குத் தொடர்ந்தார். அப்போது லுடோ திறமையான விளையாட்டு என்று தீர்ப்பளித்து, மனுதாரரின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.

இதனையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி ஷிண்டே, நீதிபதி அபய் அஹுஜா ஆகியோர் விசாரணை செய்தனர்.

அப்போது மனுதாரர் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர், "லுடோ போன்ற விளையாட்டுகள் சூதாட்டமாக மாற்றப்பட்டுவருகின்றன. இதனால் இளைய தலைமுறையினர் அதில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். பகடை வீசி அதில் வரும் எண்களை எண்ணுவதன் மூலம் லுடோ விளையாடப்படுகிறது.

இதனால் எந்த ஒரு பயனும் இல்லை. இது திறமைவாய்ந்த விளையாட்டு அல்ல; தூய அதிர்ஷ்டத்தின் விளையாட்டு” என வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.

இதனையடுத்து இது தொடர்பாக பதிலளிக்க மும்பை உயர் நீதிமன்றம், மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஜூன் 22ஆம் தேதிக்குள் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details