ராய்பூர்:சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூர் அடுத்த நய்ச் ராய்பூர் குடியிருப்பு பகுதியில் விசிட்டிங் கார்டு அளவிலான அட்டை ஒரு வீட்டில் வீசப்பட்டுள்ளது. அதில் பாலியல் ரீதியிலான உதவிகளுக்கு பிளே பாய் சர்வீஸ் என ஒருவரின் பெயர் குறிக்கப்பட்டு, தொலைப்பேசி எண்ணும் எழுதப்பட்டு இருந்தது.
அட்டை வீசப்பட்ட விஷயம் காலனி முழுவதும் பரவிய நிலையில், அதேபோல் அனைவரது வீடுகளிலும் அட்டை வீசப்பட்ட அதிர்ச்சிகர தகவல் வெளிவந்தது. சம்பவம் குறித்து பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.