மும்பை: உள்ளூர் நேரப்படி, பிற்பகல் 2.30 மணிக்கு பாரீஸ்-க்கு அருகில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் இருந்து ரோமானியன் சார்ட்டர் கம்பெனி லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ340 என்ற விமானம், 276 பயணிகள் உடன் நிகாரகுவா நோக்கிச் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது, இந்த விமானத்தில் மனிதக் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, இந்த விமானம் அவசரமாக மும்பையில் இன்று அதிகாலை 4 மணியளவில் தரையிறக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அவர்களுக்குத் தேவையான கழிப்பறை, குளியலறை, உணவு மற்றும் நீர் ஆகாரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளது. இதனிடையே, இந்த விமானத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் உள்பட 25 பேர் புகலிடம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அவர்கள் இதுவரை பிரெஞ்சு நாட்டின் குடிமகன்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும் இருவர் பிரெஞ்சு நாட்டின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள் என பிரெஞ்சு செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அதேநேரம், இந்த விமானத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லாமல் 11 பேர் சேர்ந்து 303 பேர் பயணம் மேற்கொண்டதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த பயணத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.