பிகார் மாநிலம் பாட்னாவிலிருந்து டெல்லி நோக்கி 185 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று (ஜூன் 19) புறப்பட்டது. இந்த விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது முதலாவது இன்ஜினில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனையறிந்த விமானி துரிதமாக செயல்பட்டு உடனடியாக விமானத்தை தரையிறக்கினார். இதனால் பயணிகள் பாதுகாப்பான வெளியேறினர்.
திக் திக் நிமிடங்கள்: 185 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தீ - Plane catches fire after take off
பாட்னாவிலிருந்து 185 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் இன்ஜின் பறவை மோதி தீப்பிடித்ததால் 10 நிமிடத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து பாட்னா விமான நிலையம் தரப்பில், "புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தின் முதலாவது இன்ஜினில் பறவை சிக்கியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விமானம் தடுமாறியது. பயணிகளும் கூச்சலிட தொடங்கினர். இதுகுறித்து அறிந்த விமானி மீண்டும் பாட்னா விமான நிலையத்திலேயே பாதுகாப்பாக தரையிறக்கினார்.
இதையடுத்து பயணிகள் வேறு விமானத்தில் டெல்லி அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தை சரி செய்யும் பணி தொடங்கிவிட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது விமானத்தின் உள்ளே இருந்த பயணி ஒருவர் தெரிவிக்கையில், "புறப்பட்ட 5 நிமிடங்களில் விமானம் மேலும் கீழுமாக ஆடியது. பணியாளர்களுக்கும் சரியான காரணம் தெரியவில்லை. நானும் சகப்பயணிகளும் பீதியடைந்து கூச்சலிட தொடங்கினோம். இதையடுத்து விமானம் மீண்டும் தரயிறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த 10 நிமிடங்களில் தரையிறக்கப்பட்டது. அப்போதுதான் எனக்கு உயிரே வந்தது. விமானிக்கு மிக்க நன்றி" என்றார்.
இதையும் படிங்க:அக்னிபத் திட்ட விவரங்களை வெளியிட்ட இந்திய விமானப்படை