தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுவனை கடித்துக் குதறிய பிட்புல் நாய் - pitbull dog attack uttarakhand

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பிட்புல் நாய் தாக்கியதில் 9 வயது சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உத்தரகாண்டில் சிறுவனை கடித்துக் குதறிய பிட்புல் நாய்
உத்தரகாண்டில் சிறுவனை கடித்துக் குதறிய பிட்புல் நாய்

By

Published : Dec 5, 2022, 3:26 PM IST

டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மிஷ்ரா கார்டனில் பிட்புல் நாய் தாக்கியதில் ஜோதிர் குப்தா என்னும் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று (டிசம்பர் 4) நடந்துள்ளது. இதுகுறித்து ஹரித்வார் போலீசார் கூறுகையில், ஷேக்புரா கன்காலில் வசித்துவரும் விஷால் குப்தாவின் மகன் ஜோதிர் குப்தா (9).

இவர் வாரவிடுமுறைக்காக மிஸ்ரா கார்டனில் உள்ள தனது அத்தை ராணி குப்தாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இவரது வீட்டின் வெளியே மாலை 5 மணியளவில் ஜோதிர் குப்தா விளையாடிக்கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்டுவரும் பிட்புல் நாய் தாக்கியுள்ளது. இதனால் சிறுவனுக்கு வயிறு, கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதனைக்கண்ட ராணி குப்தா சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார்.

இந்த சிறுவனின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சிறுவனின் தந்தை விஷால் குப்தா மிஷ்ரா கார்டன் போலீசாரிடம் பிட்புல் நாயின் உரிமையாளர் சுபம் ராம் சந்த்வானி மீது புகார் அளித்துள்ளார். அதில், மிகுந்த தாக்குதல் குணம் கொண்ட பிட்புல் நாயை அதன் உரிமையாளர் கட்டிவைக்காமல் இருந்ததே எனது மகன் பலத்த காயம் அடைந்ததற்கு காரணம் என குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:குஜராத்: காங்கிரஸ் எம்எல்ஏ மீது தாக்குதல்

ABOUT THE AUTHOR

...view details