தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒரே இரவில் 5 கிராமங்களில் 12 பேரை கடித்த பிட்புல் நாய் - punjab Pit bull dog

பஞ்சாப் மாநிலத்தில் ஒரே இரவில் 12 பேரை கடித்துக் குதறிய பிட்புல் வகை நாய் அடித்துக்கொல்லப்பட்டது.

Etv Bharat பிட்புல் நாய்
Etv Bharat பிட்புல் நாய்

By

Published : Oct 1, 2022, 8:20 PM IST

பஞ்சாப் மாநிலம்குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பிட்புல் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று ஒரே இரவில் 12 பேரை கடித்துள்ளது. டேங்கோ ஷா என்னும் கிராமம் முதல் சௌஹானா கிராமம் வரை சுமார் 15 கிலோமீட்டர் வழியில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த நாயை ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்கள் உதவியுடன் கொலை செய்துள்ளார்.

இந்த நாய், டேங்கோ ஷா பகுதியில் இருந்த 2 தொழிலாளிகளை கடித்துள்ளது. அப்போது, அருகிலிருந்தவர்கள் நாயின் கழுத்தில் செயினை மாட்டி கட்டிப்போட முயன்றனர். ஆனால், நாய் அங்கிருந்து தப்பித்துச் சென்று மற்றொருவரை கடித்துக் குதறியது.

அந்த வகையில் அடுத்தடுத்து 12 பேரை கடித்துள்ளது. சில கால்நடைகளையும் கடித்து சென்றுள்ளது. அப்படி சௌஹானா கிராமத்தை அடைந்த அந்த நாய், அங்கிருந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சக்தி சிங் என்பவரை கடித்துள்ளது. அதன்பின் சக்தி சிங் பொதுமக்கள் உதவியுடன் அந்த நாயை கொலை செய்தார்.

இதையும் படிங்க:கேரளாவில் பாபநாசம் பட பாணியில் கொலை - போலீசார் தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details