புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா, துறை சார் கோரிக்கைகளுக்கு பதிலுரைத்தார்.
அப்போது பேசிய அவர்,
புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் 2021-22ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திரப்பிரியங்கா, துறை சார் கோரிக்கைகளுக்கு பதிலுரைத்தார்.
அப்போது பேசிய அவர்,
- 'லைசென்ஸ் வழங்க மகளிருக்கு மட்டும் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.
- பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், சிசிடிவி வசதியுடன் கூடிய 'பிங்க் பஸ்' இயக்கப்படும்.
- மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, காற்று மாசுபடுவதைக் குறைக்க, அந்தந்த வகை வாகனங்களில் சாலையிலிருந்து 50 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படும்
- இ ரிக்க்ஷா பயன்பாட்டை கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
- மத்திய அரசு திட்டத்தின்கீழ் 200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பயணிகளுக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஸ்மார்ட் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம் பேணப்படும்
- காரைக்கால் மாவட்டம், கீழகசகுடி மாணவர் விடுதியில் முதல் தளம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
- பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின்கீழ், நடப்பாண்டில் இரண்டு மற்றும் மூன்றாம் தவணைத் தொகைகளான ரூபாய் 2 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூபாய் 6.70 கோடியில் 446 பயனாளிகளுக்கு முதல் தவணை வழங்கப்பட்டுள்ளது.
கலை மற்றும் பண்பாட்டுத்துறை
- கலை மற்றும் பண்பாட்டுத்துறை மூலம் கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை ரூபாய் 500 உயர்த்தி வழங்கப்படும்
- புதுச்சேரி கடற்கரை சாலையில் கலை மற்றும் பண்பாட்டுத்துறைக்குச் சொந்தமான இடத்தை, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைத்து, அங்கு ஆர்ட் கேலரி மற்றும் கைவினைப் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சந்திரப் பிரியங்கா பேசினார்
இதையும் படிங்க: கல்விக் கடன் ரத்து; தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு - அரசு அதிரடி