தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’கேரளாவைச் சேர்ந்தவர்களை உடனடியாக மீட்க வேண்டும்’ - பினராயி விஜயன் கோரிக்கை - தாலிபன்கள்

ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள கேரள மாநிலத்தவர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

By

Published : Aug 17, 2021, 5:16 PM IST

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா படை விலகல் நடவடிக்கையை மேற்கொண்ட பின், அந்நாட்டை தாலிபன்கள் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், நாட்டில் அவர்கள் தலைமையின் கீழ் புதிய அரசை நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதை அடுத்து அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி நாட்டை விட்டு தப்பிச் சென்றார். அதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு ஆப்கனில் பணிபுரியும் தங்கள் தூதரக அலுவலர்களை மீட்கும் பணியில் பல நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகும் ஏர் இந்தியா, இந்திய விமானப் படை விமானம் மூலம் 250க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுக் கொண்டுவந்துள்ளது.

பினராயி விஜயன் கோரிக்கை

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள கேரள மாநிலத்தவர்களை மீட்டுக் கொண்டுவர வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி ’நோர்கா ரூட்ஸ்’ என்ற அரசு சார் தொண்டு அமைப்பு அவரின் கடிதத்தை வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தந்துள்ளது.

மேலும் இதுவரை 36 பேர் உதவிகேட்டு கேரள அரசை நாடியுள்ளதாகவும், மேலும் யாரேனும் சிக்கியுள்ளார்களா என கேரள அரசு கண்காணித்து வருவதாகவும் அமைப்பின் தலைமைச் செயல் அலுலவர் ஹரிகிருஷ்ணன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பெகாசஸ் விவகாரம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சம்மன்!

ABOUT THE AUTHOR

...view details