தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவச கல்வி, மாத உதவித் தொகை - பினராயி விஜயன் அறிவிப்பு - Kerala CM twitter

கோவிட்-19 தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கேரள முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Pinarayi Vijayan
Pinarayi Vijayan

By

Published : May 27, 2021, 10:38 PM IST

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், "கோவிட்-19 தொற்று காரணமாக, பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் கருதி, அவர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும். அத்துடன் அவர்களின் 18 வயது வரை மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும், அவர்களின் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை அரசே ஏற்கும்" என அறிவித்துள்ளார். கேரளாவில் கோவிட் தொற்று காரணமாக, இதுவரை 8,063 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:வரலாற்றை மாற்றி எழுதி செங்கொடியைப் பறக்கவிட்டார் பினராயி

ABOUT THE AUTHOR

...view details