தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் எட்டு கி.மீ. துருப்பிடிக்காத வலிமையான முள்வேலி - இந்தியா பாகிஸ்தான் எல்லைப் பகுதி

பஞ்சாபில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுமார் எட்டு கி.மீ. தூரத்திற்கு நவீன முன்வேலி அமைக்கும் பணி நிறைவடைந்ததாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

India-Pakistan border
India-Pakistan border

By

Published : Feb 11, 2021, 10:45 AM IST

மத்திய நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில், பாஜக உறுப்பினர் ஸ்வேய்த் மாலிக் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள் துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதிலளித்தார். அதில், எல்லையில் உள்ள முள்வேலியை மேம்படுத்தி நவீன ரகமாக்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகக் கூறினார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மேம்பாட்டிற்காக மத்திய அரசு முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டது.

அதன்படி, பழைய முள்வேலிக்குப் பதிலாக துருப்பிடிக்காத வலுவான நவீன முள்வேலி அமைக்கும் பணி 2019ஆம் ஆண்டு தொடங்கியது. அந்தப்பணி 2020ஆம் ஆண்டில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இந்தத் திட்டப்பணியின் தூரம் 7.18 கி.மீ. எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:2022ஆம் ஆண்டுக்குள் 740 ஏகலையவன் பள்ளிகள் - பழங்குடி விவகாரங்கள் அமைச்சகம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details