தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாண்டஸ் புயல்: அடித்துச்செல்லப்பட்ட வீடுகள் - பொதுமக்கள் சாலை மறியல் - CM rangasamy

புதுச்சேரியை அடுத்த பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மாண்டஸ் புயல்: புதுச்சேரியில் பொதுமக்கள் சாலை மறியல் - முதலமைச்சர் ஆய்வு
மாண்டஸ் புயல்: புதுச்சேரியில் பொதுமக்கள் சாலை மறியல் - முதலமைச்சர் ஆய்வு

By

Published : Dec 9, 2022, 2:51 PM IST

புதுச்சேரியின் எல்லையில் உள்ளது, பிள்ளைச்சாவடி மீனவ கிராமம். இந்த கிராமத்தின் ஒரு பகுதி புதுச்சேரியிலும், மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொழியும் பருவ மழையால் ஏற்படும் கடல் அரிப்பால் வீடுகள் அடித்துச்செல்லப்படுவது தொடர் கதையாகி வருகிறது.

குறிப்பாக கடந்த 10ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகள், 500க்கும் மேற்பட்ட மரங்கள் ஆகியவை கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது உருவாகியுள்ள மாண்டஸ் புயலால், பிள்ளைச்சாவடியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

மேலும் 10க்கும் மேற்பட்ட வீடுகள் கடலில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கிழக்கு கடற்கரைச் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து அறிந்த மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மற்றும் கோட்டக்குப்பம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

இதனால் புதுச்சேரி சென்னை ஈசிஆர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இதனிடையே பிள்ளைச்சாவடி கிராமத்தின் வடக்குப் பகுதியில், கடந்த 2019ஆம் ஆண்டில் இரண்டு கோடி மதிப்பீட்டில் மீனவர்களின் உடைமைகளைப் பாதுகாக்க மீன்பிடி கலன் கட்டி கொடுக்கப்பட்ட கட்டடம், கடல் அலையில் பெயர்ந்து செல்லும் அபாயத்தில் உள்ளது.

மாண்டஸ் புயல்: அடித்துச்செல்லப்பட்ட வீடுகள் - பொதுமக்கள் சாலை மறியல்

மேலும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் வல்லவன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:மாண்டஸ் புயல்: 15 அடி உயர ராட்சத அலையால் பாதிக்கப்பட்ட சந்திரபாடி

ABOUT THE AUTHOR

...view details