தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சார்தாம் யாத்திரை; இதுவரை 32 பேர் உயிரிழப்பு! - சர்தாம் யாத்திரையில் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு

உத்தரகண்ட் மாநிலம் சார்தாம் யாத்திரையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

சர்தாம் யாத்திரையில் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!
சர்தாம் யாத்திரையில் யாத்ரீகர்கள் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்வு!

By

Published : May 14, 2022, 11:14 AM IST

Updated : May 14, 2022, 3:04 PM IST

டேராடூன் (உத்தரகண்ட்):உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் உள்பட 4 கோயில்களுக்கு சார்தாம் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களின் உயிரிழப்பு 32 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக உத்தரகண்ட் மாநிலத்தின் தலைமைச் செயலாளர் எஸ்.எஸ்.சந்து NDRF (தேசிய பேரிடர் மீட்பு படை) மூலம் போதிய உதவிகள் செய்து உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் மேலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது குறித்து மாநில சுகாதரத் துறை டிஜி சைலஜா கூறுகையில், மருத்துவ முகாமில் போதுமான மருத்துவர்கள் பணியமர்ததப்பட்டு உள்ளனர். இருப்பினும் வழித்தடங்களிலும், ஹெலிகாப்டர்களில் இருந்து இறங்கும் போதும் இறப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் NDRF மீட்புக்குழு மூலம் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இறந்தவர்கள் பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13 இறப்புகள், 51 முதல் 60 வயது வரையிலானவர்களில் ஏழு இறப்புகள், 41 முதல் 50 வயது வரை உள்ளவர்களில் நான்கு இறப்புகள் மூன்று பேர் 30 முதல் 40 வயதுக்குள்பட்டவர்கள் என பதிவாகியுள்ளன. இறந்தவர்களின் உடற்கூராய்வு சோதனைகள் அவர்களின் உறவினர்களின் ஒப்புதலுக்குப் பிறகு நடத்தப்படுகின்றன.

இதற்கிடையில், மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரி நந்தன் சிங் ராஜ்வார் கூறுகையில், சார்தாம் யாத்ரீகர்களின் பாதுகாப்பிற்காக, இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவல் படையின் (ஐடிபிபி) ஒரு படைப்பிரிவு கேதார்நாத் சன்னிதியிலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் நிறுத்தப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: உத்தரகண்ட் சார்தாம் யாத்திரை; 10 நாளில் 28 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

Last Updated : May 14, 2022, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details