டெல்லி: அரசியல் நோக்கங்களுக்காக விவசாயிகளை "பயங்கரவாதிகள்" என்று பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார். ஆகவே அவர் மீதும், சம்பந்தப்பட்ட செய்தி சேனலுக்கு எதிராகவும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தேசிய புலனாய்வு அமைப்புக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், “டெல்லியில் போராடும் விவசாயிகள் கையில் எந்தவொரு ஆயுதமுமின்றி நிராயுதபாணியாக தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்துகின்றனர். அவர்களை பாஜக செய்தித்தொடர்பாளர் பயங்கரவாதி என்று வர்ணிக்கிறார்” என்று கூறப்பட்டுள்ளது.