புதுச்சேரி:கேசிஎஃப் சிக்கன் உணவகத்தில் பர்கரில் பிளாஸ்டிக் கையுறை இருந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனத்தை சேர்ந்தவர் டேவிட் என்பவர் தனது நண்பர்களுடன் புதுச்சேரியிலுள்ள ஒரு கேஎஃப்சி சிக்கன் (KCF chicken) உணவகத்தில் இன்று (செப்.13) பர்கர் ஆர்டர் செய்ததாகவும் அப்போது அவருக்கு வழங்கிய பர்கரில், பிளாஸ்டிக் கை உறையின் துண்டு ஒன்று இருந்ததாகவும் கூறுகிறார்.
இது குறித்து அக்கடையின் ஊழியர்களிடம் கூறப்பட்டதைத் தொடர்ந்து, மன்னிப்பு கேட்ட ஊழியர்கள் வேறு ஒரு பர்கர் தருவதாகக் கூறியுள்ளார். அதற்கு மறுத்து விட்டதாக தெரிவித்த டேவிட், இதுகுறித்து விழுப்புரம் உணவு பாதுகாப்புத்துறையில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார்.