ஹைதராபாத்:ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி, "உலக பிசியோதெரபி தினம்" கொண்டாடப்படுகிறது. பிசியோதெரபி என்றும் அழைக்கப்படும் ’பிசிக்கல் தெரபி’என்பது உடல் சார்ந்த நோய் அல்லது மூட்டு வலி, தசை வலி, பக்கவாதம், சிதைவு போன்ற நிலைமைகள் உள்ள மக்களுக்கு வழங்கபட வேண்டிய ஒரு முக்கிய சிகிச்சையாகும்.இது பிசியோதெரபிஸ்ட்டால் நடத்தப்படுகிறது.
தினமும் பிசியோதெரபி எடுத்துகொள்ளும் மூலம் நேயாளிகளை சுறுசுறுப்பாக வைத்து இது உதவுகிறது.மேலும் மூட்டு, தசைகளின் இயக்கம் பாதிக்கப்பட்டால், சிகிச்சைக்கு பின் அவற்றைச் சரிசெய்யவும், பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவும்.இது ஊசி, மருந்துகளை பயன்படுத்தாமல் உடற்பயிற்சி செய்வதன் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகாணும் ஒரு வழிமுறை. உடலில் அடிபட்டால் காயத்தின் தீவிரத்தைக் குறைக்கவும், பாதிப்பிலிருந்து மீளவும் பிசியோதெரபி உதவுகிறது. இன்றைய நவீன காலத்தில் பட்டிதொட்டி எங்கும் பிசியோதெரபி மையங்கள் முளைத்துவிட்டன.
நவீன பிசியோதெரபி சிகிச்சை முறைகள் குறித்து கோவை கேஜி பிசியோதெரபி கல்லூரியின் இணைப் பேராசிரியர் ஹரிஹரசுதன் கூறுகையில், "பிசியோதெரபி என்பது நோயாளிகளின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை மேம்படுத்தும் ஒரு உன்னதமான தொழிலாகும்.இதில் நரம்பியல் பிசியோதெரபி, எலும்பியல் பிசியோதெரபி, கார்டியோ-சுவாச பிசியோதெரபி, மகப்பேறியல் பிசியோதெரபி மற்றும் ஸ்போர்ட்ஸ் பிசியோதெரபி உள்ளிட்ட பல வகையான சிகிச்சை முறைகள் உள்ளன" என்றார்.
மருத்துவர் மருந்துகளை பரிந்துரைப்பது போல, நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகளை பரிந்துரைப்பது பிசியோதெரபி ஆகும், பக்கவாதம், பார்கின்சன் நோய், எலும்பு முறிவுகள், மூட்டுவலி, சிஓபிடி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உடற்பயிற்சிகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது.அதேபோல் நேயாளிகளின் தன்மையை பெறுத்து அவர்களுக்கு ஏற்றாற் போல் தனித்தனியாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை பரிந்துரைக்கும் உரிமை பிசியோதெரபிஸ்ட்க்கு மட்டுமே உள்ளது.
ஒரு தனிநபருக்கு பிசியோதெரபி சிகிச்சை தேவைப்பட்டால், முதலில் நோயாளியை உடல்ரீதியாக மதிப்பீடு செய்து,அவர்களின் பிரச்சனையைக் கண்டறிவோம்,பின்பு அந்த நோயாளிக்கு எந்த உடற்பயிற்சி தேவையோ அது நாள் வாரியாக தொகுத்து வழங்கப்படும்.மேலும் பயிற்சிகளைச் செய்யும்போது எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன என்பதையும், ஒவ்வொரு உடற்பயிற்சி அமர்வுகளுக்கு இடையில் சரியான ஓய்வு இடைவெளியில் குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும்.சரியான பயிற்சிகள் மற்றும் சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் , நோயாளிகள் விரைவில் குணமடைந்து , ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என தெரிவித்தார்.